மாலபே தனியார் பல்கலைக்கழகத்தை மூடாமல் எந்தவொரு தீர்வுக்கும் முகம்கொடுக்க தயார்- லக்ஷ்மன் கிரியெல்ல

327 0

மாலபே தனியார் பல்கலைக்கழகத்தை மூடாமல் எந்தவொரு தீர்வுக்கும் முகம்கொடுக்க தயாரென உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் பல்கலைக்கழகம் குறித்த பிரச்சினை நீதிமன்றம்வரை சென்றுள்ள நிலையில், இறுதித் தீர்மானம் நீதிமன்றத்திடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினையில் தலையிட்டு தீர்வொன்றை காணுமாறு தைநிக்காய மகாநாயக்கர்கள் நேற்று ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வுகாணாதபட்சத்தில், அது நாட்டுக்கு பாதிப்பாக அமையும் என மகாநாயக்கர்களின் கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே குறித்த பிரச்சினையை மேலும் வளரவிடாது அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடியவகையிலான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment