டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்பாண போதனா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த ஒருவர் நேற்று மரணமானார்.
மருத்துவமனை பணிப்பாளர் ஜி சத்தியமூர்த்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு நாளொன்;றுக்கு 35 பேர் வரை டெங்கு நோய்த்தாக்கத்துடன் சிகிச்சைக்காக வருவதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினை அடுத்து டெங்கு தொற்று பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்துமாறு, தொற்றுநோய் தடுப்பு பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.