ரயில் சாரதிகள் முன்னெடுத்த வேலை நிறுத்தம் காரணமாக, ரயில்வே திணைக்களத்திற்கு 12 மில்லியன் ரூபா வரை நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய, ரயில் பயணச் சீட்டு மற்றும் ஆசன முற்பதிவு போன்றவற்றில் இருந்து கிடைக்கப்பெரும் பணம், குறித்த காலப் பகுதியில் கிடைக்காது போயுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 11ம் திகதி மாலை முதல் மேற்கொள்ளப்பட்ட இந்த வேலை நிறுத்தம் காரணமாக, 350க்கும் அதிகமான ரயில் போக்குவரத்துக்கள் இரத்துச் செய்யப்பட்டன.
எனவே, ரயிலில் பயணிக்க ஆசனங்களை ஒதிக்கீடு செய்த மற்றும் பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்த பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இவர்கள் செல்வதற்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களும் ஒழுங்கு செய்யப்பட்டதோடு, சில பயணிகளுக்கு வழங்கப்பட்ட டிக்கட்டுக்களுக்கான பணத்தை மீள அளிக்க வேண்டியும் ஏற்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.