ஈராக்கின் டெயர் அல் ஸொரின் மயாடீன் நகரம் மீட்பு

377 0
ஈராக்கின் கரையோர மாகாணமான டெயர் அல் ஸொரின் மயாடீன் நகரம் ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சிரிய கூட்டுப்படை இந்த தகவலை உறுதிசெய்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஐ.எஸ் அமைப்பு உட்பட்ட தீவிரவாத அமைப்புக்கள் செயற்பட்டுவருகின்றன.

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் சிரியாவின் பல பகுதிகள் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.

இந்த நிலப்பகுதிகளை மீட்கும் பொருட்டு சிரிய அரச படைகளுக்கு அமெரிக்க மற்றும் ரஷ்ய இராணுவ படைகள் தாக்குதல்களை நடத்திவருகின்றன.

இதேவேளை, சோமாலியாவின் தலைநகர் மொகடிவை அண்டிய பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 20 பேர் மரணித்ததுடன் 15 பேர் காயமடைந்தனர்.

சோமாலியாவின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகள் இயங்கி வருகின்றனர்.

சோமாலியா ஆட்சியை கவிழ்த்து இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவும் நோக்கில் இந்த தீவிரவாத அமைப்புக்கள் செயற்பட்டுவருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, தீவிரவாதிகள் உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல்களை நடத்திவரும் தீவிரவாதிகள், மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினர் மீதும் தாக்குதல்களை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது

Leave a comment