சிரியாவில் 100 ஐ.எஸ். தீவிரவாதிகள் சரண்

505 0
சிரியாவின் ரக்கா நகரை கைப்பற்றுவாதற்கு சிரிய இராணுவம் நடத்திவரும் தாக்குதலால் கடந்த 24 மணி நேரத்தில் 100 ஐ.எஸ். தீவிரவாதிகள் சரண் அடைந்துள்ளனர்.

சிரிய ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை அந்த நாட்டில் ஆயுதப் புரட்சி ஆரம்பமானது.

இதில் சில ஆயுதக் குழுக்கள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை, ஐ.எஸ் தீவிரவாதிகள் பெரும் ஆதிக்கத்தை செலுத்திவருகின்றனர்.

இந்த உள்நாட்டு யுத்தத்தினால் சுமார் 3 லட்சம் மக்கள் இதுவரையில் பலியாகியுள்ள அதேவேளை, 11 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரியாவின் சில முக்கிய நகரங்களை ஆக்கிரமித்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் அங்கு ஆதிக்கம் செலுத்தி வரும்நிலையில், அங்கிருந்து அகற்றும்பொருட்டு சிரிய அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகளின் வான் படைகள் தாக்குதலில் ஈடுபடுகின்றன.

இந்நிலையில், ரக்கா நகரில் முகாமிட்டுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகளை குறிவைத்து அந்த நகரின் அமெரிக்க போர் விமானங்களின் துணையுடன் சிரியா இராணுவம் உச்சகட்ட தாக்குதலை நடத்தி வருகிறது.

இதேவேளை, நேற்றைய தினம் ஐ.எஸ் தீவிரவாதிகள் நாடத்திய தாக்குதலில் குருதிஷ் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் உட்பட 50 பேர் மரணித்தனர்.

தெய்ர் எசோர் மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், பொதுமக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புலனாய்வுத்துறைகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a comment