கடந்த ஆறு நாட்களாக கலிபோனியாவில் ஏற்பட்டுள்ள தீ காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
இது தவிர நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போய் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றாக அழிந்துள்ளன.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
பத்தாயிரத்திற்கும் அதிகமான தீயணைக்கும் தரப்பினர் இரவு பகலாக தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
தீ ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 45 மைல் வேகத்தில் வீசுவதன் காரணமாக தீ புதிய நகரங்களை நோக்கி பரவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்திரிகை பழ செய்கை உற்பத்தி பிரதேசமான சொனோமா பிராந்தியமே அதிக பாதிப்பை ஏதிர்நோக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 13 பாரிய வைன் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அதனை அண்டியுள்ள முந்திரிகை பழ பயிர்ச்செய்கைகள் முற்றாக அழிந்து போய் உள்ளன.
நேற்றும் மூன்றாயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.