வடக்கு அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதி தொடர்பில் ஆராயப்படும் – ஜனாதிபதி

858 0

வடக்கின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி உரியமுறையில் பயன்படுத்தப்படாமை தொடர்பில் ஆராய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கிளிநோச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையின் ஏனைய பிரதேசங்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை போன்றே வடக்கின் அபிவிருத்திக்காக பாரிய அளவு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும் இந்த நிதி சரியான முறையில் செலவிடப்படுவதில்லை.

வடக்கில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும்.

அதற்காக வடக்கில் விசேட வேளைத்திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், வடக்கில் விவசாயிகளது பிர்ச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

Leave a comment