யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா – குருந்துபிட்டி பிரதேசத்தில் பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று விபத்திற்கு உள்ளானதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று அதிகாலை விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சாரதிக்கு நித்திரை ஏற்பட்டுள்ள நிலையில், பாரவூர்தி பாலம் ஒன்றில் மோதி கால்வாயில் வீழ்ந்து பின்னர் முழுமையாக கவிழ்ந்துள்ளது.
இதில் பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளரும் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.