ஜப்பான் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினை பார்ப்பதற்காக இன்று தங்காலை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
அண்மையில் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் கைது செய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.