சைட்டம் பிரச்சனை தொடர்பில் தைநிக்காய மகாநாயக்கர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது அரசாங்கத்தின் கடமை என மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிமால் குமாரசிறி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்லவும், ராஜித சேனாரட்னவும், சைட்டம் தொடர்பில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இது தவிர, சைட்டம் நிறுவனத்தை அகற்றி மருத்துவ கல்வியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.