சிரியா மீதான தாக்குதலுக்கு ரஷ்யா தங்கள் நாட்டு விமானப்படை தளத்தை தவிர்த்தது

384 0

201608230520254812_Russia-Has-Stopped-Using-Iran-Base-For-Syria-Strikes-Iran_SECVPFசிரியா மீதான தாக்குதலுக்கு தங்கள் நாட்டு விமானப் படை தளத்தை பயன்படுத்துவதை ரஷ்யா நிறுத்திவிட்டது என்று ஈரான் தெரிவித்துள்ளது.உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வரும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் உள்ள அலெப்போ நகரை மீட்பதற்கு அதிபர் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன. அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா கடந்த செப்டம்பர் மாதம் வான் தாக்குதலைத் தொடங்கியது.
அலெப்போவின் பெரும்பாலான பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது ரஷ்ய போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்ப்டடது.

இந்த தாக்குதலை நடத்துவதற்காக இதுவரை சிரியா மற்றும் ரஷ்யாவில் உள்ள விமானப்படை தளங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. மேலும் ஈரானில் உள்ள விமானப்படை தளத்தை ரஷ்யா பயன்படுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில், சிரியாவில் தீவிரவாதிகள் மீதான வான்வெளி தாக்குதலுக்கு தங்கள் நாட்டு விமானப் படை தளத்தை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

மாஸ்கோவிடம் இருந்து உடனடியாக பதில் கிடைக்கவில்லை. ஷாகித் நோஜெக் விமானப் படை தளத்தை சிரியா மீதான தாக்குதலில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப கடந்த வாரத்தில் மூன்று முறை பயன்படுத்தி வந்தது.

இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் பக்ராம் காசெமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிரியாவில் தீவிரவாதிகள் மீதான வான்வெளித் தாக்குதல்கள் தற்காலிகமானது, ரஷ்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க நடைபெற்றது.

தாக்குதலில் ரஷ்யாவின் நடவடிக்கை குறித்து ஈரான் பாதுகாப்பு துறை மந்திரி விமர்சனம் செய்த சில மணி நேரங்களில் இது நடைபெற்ற்துள்ளது” என்றார்.