5 மாவட்ட மக்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

308 0

5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிய ஆராய்ச்சி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி , காலி , மாத்தறை , நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக , எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு குறித்த பிரதேச மக்கள் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a comment