இலங்கையில் இருந்து டுபாய்க்கு வல்லப்பட்டை மற்றும் கையடக்க தொலைபேசிகளை கடத்திச்செல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க வானுர்தித் தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று அதிகாலையில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வசமிருந்த 15 கிலோ கிராம் வல்லப்பட்டை மற்றும் 157 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த பொருட்களின் பெறுமதி 28 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பை சேர்ந்த இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.