சிறுமியை தாக்கிய தந்தை கைது

397 0

தனது மகளை தடியொன்றால் தாக்கி துன்புறுத்திய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரவெவ – ரொடவெவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ள 9 வயது சிறுமி திருகோணமலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

40 வயதுடைய குறித்த நபர் குடிபோதையில் இவ்வாறு சிறுமியை தாக்கியுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

Leave a comment