தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்

518 0

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்பாக இந்த கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் எதுவித விசாரணைகளும் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, வடக்கில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு ஆதரவாக இந்த கவன ஈர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் நடைபெற்றது.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment