இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா ஏ .பி.ஜே. அப்துல் கலாமின் 86வது பிறந்த தினம் இன்றையதினம் யாழில் கொண்டாடப்பட்டது.
யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது முதற்கட்டமாக யாழ்.பொது நூலகத்தில் உள்ள இந்திய பகுதியில் உள்ள அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு இந்திய துணைத் தூதுவர் ஆ. நடராஜன் மற்றும் பிரதம அதிதிகள் பாடசாலை மாணவர்கள் எனபலரும் மலர் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து, யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் பாடசாலை மாணவர்களின் கலை கலாசாச நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பிரதானமாக இந்தியாவிலிருந்து வருகைதந்திருந்த தென்னிந்திய சொற்பொழிவாளர் சுகி சிவத்தின் சொற்பொழிவுடன் கலாமின் நினைவுப் பேருரையும் இடம் பெற்றது.
மத தலைவர்கள், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் வடமாகாண சபை அவைத் தலைவர் சீ. வீ.கே.சிவஞானம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சமூக ஆர்வலர்கள், இந்திய துணைத் தூதுவர் அலுவலக அதிகாரிகள் எனப்பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்