சிறுமியை தாக்கிய தந்தை கைது!

410 0

திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் 9 வயதான சிறுமியை தாக்கிய தந்தையொருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று இரவு எட்டு மணியளவில் மொரவெவ காவல்துறையினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் இருந்த தமது கணவர், சிறு மரக் குற்றியொன்றினால் தமது மகளின் நெற்றி மற்றும் முதுகுப் பகுதிகளில் காயம் ஏற்படுத்தியுள்ளதாக சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

காயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment