காணாமலாக்கப்பட்ட தனது கணவனையும் மகனையும் தேடி ஒன்பது வருடங்கள் போராடிய தாயொருவர் இன்று அதிகாலை மரணம்!

2480 0

காணாமல் ஆக்கப்பட்ட அன்பான கணவரையும்இ உயிரான மகனையும் தேடி 9 வருடங்கள் போராடியும் ஒருமுறையேனும் காணமுடியவில்லையே என்ற ஏக்கத்துடன் தாயொருவர் மாரடைப்பினால் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

கடற்படையின் இரகசிய முகாமில் கணவரதும், மகனினதும் அடையாள அட்டைகளும் காணப்பட்டதையடுத்து, குறித்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கொழும்பில் கடற்படையின் இரகசிய முகாமில் கண்டெடுக்கப்பட்ட 12 அடையாள அட்டைகள் தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

அந்த வழக்கின் சாட்சிகளில் ஒருவரான காணாமல் ஆக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த நபரின் தாய் ஜெசிந்தா பீரீஸ் அவர்கள் காலமாகிவிட்டார்.

இறுதியாக கடந்த கிழமை வழக்கிற்கு சென்றுவந்த அவர் அடுத்த தவணை தன்னால் வரமுடியாதெனவும் வழக்கை ஏனையவர்களைப் பாருங்கள் என கூறிச் சென்றார் என ஏனைய சாட்சிகள் தெரிவிக்கின்றனர்.

இவர் தனது கணவனுக்கும், மகனுக்கும் என்ன நடந்ததெனத் தெரியாத நிலையில் குறித்த தாயாரும் இன்று அதிகாலை யாழ். போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

Leave a comment