இலங்கையின் பல பகுதிகளிலும் நிலவிவரும் அதிக மழையுடனான காலைநிலை காரணமாக நில்வலா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் தாழ்நிலப்பிரதேசமான பானதுகம பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அக்குரஸ்ஸ பகுதியில் உள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, களுகங்கையின் வெள்ளநிலை காரணமாக சிறிய அளவிலான வெள்ளநிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்துவரும் 6 மணித்தியாலங்களில் இந்த வெள்ளநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, களனி, கிங் மற்றும் அத்தனுகலு ஓயவை அண்டிய பகுதிகளில் வெள்ள அபாயம் குறைவடைந்துள்ளது.