கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைதிரிபால சிறசேன காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்ட தேசிய உணவு உற்பத்தி நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஜனாதிபதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.
இதன்போது, ஜனாதிபதி, கிளிநொச்சியில் 111 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்துவைத்தார்.
இதனை அடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தார்.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஜனாதிபதியை பிரத்தியேகமாக சந்திக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததனை அடுத்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பிற்கு சென்று ஜனாதிபதியை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதிமொழி வழங்கியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது.