பாரியளவான நெல் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் நபர் ஒருவர் ஊறாவூர் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
எறாவூர், செங்கலடி பிரதேசத்தில் உள்ள நெல் களஞ்சியசாலை ஒன்றில் இருந்து சுமார் 18000 நெல் மூட்டைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்டுள்ள நெல்லின் பெறுமதி சுமார் 05 கோடி ரூபாவுக்கும் அதிகமானது என்று தெரிய வந்துள்ளது.
எறாவூர், காந்தாபொல வீதி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இன்று ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.