மனித உரிமை மீறல்களின் துன்பங்களை நீக்குவது சிரமமானது

378 0

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களின் துன்பங்களை நீக்குவது சிரமமானது, இருந்தும் ஆணைக்குழுக்களை நியமித்து குழுவாக இணைந்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

ஓன்றினைந்து செயல் விளைவினை அதிகரித்து சில பாகங்களில் நடந்த அனுபவங்களை வைத்து கொள்கை மூலம் நீதி மற்றும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென ஐ.நா சபையின் விசேட பிரதிநிதி பப்லோ டி கிறிப் (Pablo de Greiff) வலியுறுத்தினார்.

நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்துரையாடல் செயலணி, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நிலைமாறு கால நீதி தொடர்பான கலந்துரையாடல் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Leave a comment