மாலபே தனியர் வைத்தியக் கல்லூரி தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் வகுக்கப்பட்ட குறைந்தபட்ச தரக் கண்காணிப்பு உள்ளடங்கிய அறிக்கை இலங்கை மருத்துவ சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச தரம் சம்பந்தமாக வர்த்தமானி அறிவித்தல் வௌியிடுவது சம்பந்தமாக சட்டமா அதிபருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அந்த அறிக்கை கிடைத்ததாக இலங்கை மருத்துவ சபையின் பதிவாளர் வைத்தியர் டெரன்ஸ் காமினி டி சில்வா கூறினார்.
இலங்கை மருத்துவ சபையின், மருத்துவக் கல்லூரிக்கான குறைந்தபட்ச தரம் தொடர்பான குழு, அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக எதிர்வரும் 17ம் திகதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
அந்த பேச்சுவார்த்தையின் பின்னர் குழுவினால் எடுக்கப்படும் முடிவு சம்பந்தமாக சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக வைத்தியர் டெரன்ஸ் காமினி டி சில்வா கூறினார்.
அதன்பின்னர் மாலபே தனியர் வைத்தியக் கல்லூரி தொடர்பான குறைந்தபட்ச தரம் வர்த்தமானியில் வௌியிடப்படும் என்று அவர் கூறினார்.