சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்க ஆபரணங்களை நாட்டிற்கு கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் டுபாயிலிருந்து உடம்பில் மறைத்துக் கொண்டு தங்க ஆபரணங்களை கொண்டு வந்துள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
அந்த தங்க ஆபரணங்களின் பெறுமதி சுமார் 03 மில்லியன் ரூபா என்று சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க கூறினார். வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்கப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.