கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ளும் விசேட கலந்துரையாடல் நாளை ஞாயிற்றுக்கிழமை தங்காலையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கார்டன் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இந்தச் சந்திப்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஜப்பானுக்கான விஜயத்தை அவசரமாக நிறைவு செய்துகொண்டு இன்று நாடு திரும்பவுள்ள மஹிந்த ராஜபக் ஷ கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களை சந்தித்து முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் மீதான தொடர் அடக்குமுறைகள் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் உள்ளிட்ட அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான வலுவான கூட்டணி அமைத்தல் என்பன நாளைய சந்திப்பின் முக்கிய விடயங்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
இதேவேளை நீதிமன்ற தடையுத்தரவை மீறி அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள னர்.
அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக் ஷ, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தங்காலை சிறைச்சாலையில் விளக்கம றியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ உள்ளிட்டவர்களை மஹிந்த ராஜபக் ஷ சென்று சந்திக்க உள் ளமை குறிப்பிடத்தக்கது.
Pingback: URL
Pingback: ปั่นสล็อตเว็บใหญ่ ทดลองเล่นเกมฟรี
Pingback: ปั่นสล็อตเว็บนอกฟรี
Pingback: สล็อตเว็บตรง ทุนหลักร้อย
Pingback: เช่ารถตู้พร้อมคนขับ
Pingback: My Homepage
Pingback: cinemarule
Pingback: Heng888
Pingback: ยอย
Pingback: สล็อตเว็บตรง โบนัสแตกบ่อย ถอนเงินได้ชัวร์ไม่โกง
Pingback: wing888 wallet ฝากถอนออโต้
Pingback: special promo
Pingback: สล็อตออนไลน์เกาหลี
Pingback: lg96
Pingback: บริษัทรับเขียนโปรแกรม
Pingback: ricky casino
Pingback: Diyala University 1st