ரெயில்வே பட்ஜெட்டை ரத்து செய்த பிறகு பொது பட்ஜெட்டில் புதிய ரெயில்கள் அறிவிப்பு இருக்காது

337 0

201608230819251536_Announcement-regarding-new-trains-may-now-be-part-of-Budget_SECVPFரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்த பிறகு, பொது பட்ஜெட்டில் புதிய ரெயில்களை வாசிக்கும் வழக்கம் இருக்காது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்த பிறகு, பொது பட்ஜெட்டில் புதிய ரெயில்களை வாசிக்கும் வழக்கம் இருக்காது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது, ரெயில்வே துறையைத் தவிர, ராணுவம் உள்ளிட்ட அனைத்து அமைச்சகங்களுக்கும் பொது பட்ஜெட்டில்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. ரெயில்வே அமைச்சகத்துக்கு மட்டும் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

92 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்கலாம் என்று ரெயில்வே மந்திரி யோசனை தெரிவித்துள்ளார். இதற்கான வழிமுறைகளை வகுக்க 5 பேர் அடங்கிய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. அக்குழு 31-ந் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொதுவாக, ரெயில்வே பட்ஜெட்டில், புதிய ரெயில்கள் விடுவது பற்றியும், புதிய ரெயில் பாதைகள் அமைப்பது பற்றியும் ரெயில்வே மந்திரி நீண்ட அறிக்கையை வாசிப்பது வழக்கம். ஆனால், ரெயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டால், புதிய ரெயில்கள் மற்றும் ரெயில் பாதைகள் குறித்து பொது பட்ஜெட்டில் நிதி மந்திரி வாசிக்க மாட்டார் என்று மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதற்கு பதிலாக, பட்ஜெட் இணைப்பு புத்தகத்தில் புதிய ரெயில்கள் மற்றும் ரெயில் பாதைகள் பற்றி குறிப்பிடப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், ஆங்கிலேயர் கால நடைமுறையை மாற்றி, ஜனவரி மாத கடைசி வேலைநாளில், அதாவது, ஜனவரி 31-ந் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வது பற்றியும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

ஏனென்றால், தற்போதைய முறையில், பிப்ரவரி மாத கடைசி வேலை நாளில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, 2 கட்டங்களாக அதை நிறைவேற்றுவதற்கு மே மாதம் ஆகிவிடுகிறது.

எனவே, பட்ஜெட் தொடர்பான ஒட்டுமொத்த பணிகளையும் மார்ச் 31-ந் தேதிக்குள் முடித்து, அதற்குள் பட்ஜெட்டையும் நிறைவேற்றும் வகையில், ஜனவரி மாதமே பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு விரும்புகிறது. அப்படிச் செய்தால், முன்பண மானிய கோரிக்கைக்கு அவசியம் இல்லாமல், நேரடியாக பட்ஜெட்டை நிறைவேற்றி விடலாம் என்று மத்திய அரசு கருதுகிறது.

தற்போது, ஏப்ரல் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலம், நிதி ஆண்டாக கருதப்படுகிறது. இந்த வழக்கத்தையும் கைவிட்டு, நிதி ஆண்டுக்கான காலத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு விரும்புகிறது. இதுபற்றி ஆராய முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது.