தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலையத்தில் 2 மின் உற்பத்தி எந்திரங்களும் பழுது

337 0

201608230811485359_Thoothukudi-NTPL-2-Power-Plant-repair-of-electrical_SECVPFதூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம் அருகே தமிழ்நாடு மின்சார வாரியம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகியவை இணைந்து அனல்மின் நிலையத்தை அமைத்துள்ளன. புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் இந்த அனல்மின் நிலையத்தில், 500 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 2 மின் உற்பத்தி எந்திரங்கள் நிறுவப்பட்டு இயங்கி வருகின்றன.
இந்த அனல்மின் நிலையத்தில் உள்ள 2 மின்சார உற்பத்தி எந்திரங்களிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 15 நாட்கள் முழு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

நேற்று காலையில் திடீரென்று இந்த 2 மின்உற்பத்தி எந்திரங்களிலும் அடுத்தடுத்து பழுது ஏற்பட்டது. 1-வது மின்சார உற்பத்தி எந்திரத்தில் இருந்து எரிந்த சாம்பலை வெளியேற்றும் கன்வேயர் பெல்ட்டில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் 1-வது எந்திரம் நிறுத்தப்பட்டது.

அதே நேரத்தில் 2-வது மின் உற்பத்தி எந்திரத்தில் உள்ள கொதிகலன் குழாயில் துவாரம் விழுந்தது. இதனால் 2-வது மின்உற்பத்தி எந்திரமும் நிறுத்தப்பட்டது.

ஒரே நேரத்தில் 2 மின்சார உற்பத்தி எந்திரங்களும் நிறுத்தப்பட்டதால், 1,000 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து மின்உற்பத்தி எந்திரங்களில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணியில் அதிகாரிகள், ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.