அரசியல் கைதிகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர்- சிரேஸ்ட சட்டத்தரணி பி.அன்ரன் புனிதநாயகம்(காணொளி)

663 16

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுவதாக, சிரேஸ்ட சட்டத்தரணி பி.அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை இன்று பார்வையிட்டதன் பின்னர் வவுனியாவிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே, சிரேஸ்ட சட்டத்தரணி பி.அன்ரன் புனிதநாயகம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்த சட்டத்தரணி பி.அன்ரன் புனிதநாயகம், அவர்களுக்கு சிறை அதிகாரிகள் உடலில் “சேலைன்” ஏற்றிவருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ்மெழி தெரிந்த நீதிபதியின் முன் தங்கள் வழக்குகள் விசாரிக்கப்படவேண்டும் என உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளதாகவும், அத்துடன் தங்களை பார்வையிட்ட அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கிவிட்டு சென்றுள்ளதாகவும் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி பி.அன்ரன் புனிதநாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment