கலிஃபோர்னியா காட்டுத்தீயால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

8323 221

வடக்கு கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் அங்குள்ள நிலைமை மிகவும் பாரதூரமானதாக மாறி வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் நூற்றுக் கணக்கான மக்கள் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

திராட்சை நகரம் என்று வர்ணிக்கப்படுகின்ற வைன் உற்பத்தி சாலைகள் அமைந்துள்ள பிரதேசங்களிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரவதற்காக 8 ஆயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீயினால் ஒருலட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி அழிந்திருப்பதுடன், மூவாயிரத்து 500 கட்டிடங்கள் வரையில் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment