ஒமந்தை, நொச்சிமோட்டையில் இன்று (13) மாலை 3 மணியளவில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த மூவர், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதியசின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் நொச்சிமோட்டை இளைஞர் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கமே மோதலாக மாறி வாள்வெட்டில் முடிந்துள்ளது.
இதுபற்றி அறிந்த ஓமந்தை பொலிஸார், காயமடைந்த மயூரன் (29), நிதர்சன் (22), சங்கீதன் (38) ஆகிய மூவரையும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காட்டுக் கத்தி, முற்கம்பி, கத்திகள் என்பனவற்றையும் கைப்பற்றினர்.
குறித்த இரு கிராமங்களையும் சேர்ந்த இளைஞர் குழுக்கள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.