இலவச Wi-Fi சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

252 0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக இலவச Wi-Fi சேவையை நாடுமுழுவதிலும் விரிவுபடுத்தும் ஒரு கட்ட வேலைத்திட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ், கொழும்பு நகரத்தை உள்ளடக்கிய வகையில் 100 Wi-Fi வலயம் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபையின் தலைமையில் இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 20 Wi-Fi வலயங்களை ஆரம்பிப்பதற்கு தற்பொழுது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்கீழ் தற்போது 10க்கும் மேற்பட்ட Wi-Fi வலயங்கள் செயற்பட்டு வருகின்றன.

இந்த பொது Wi-Fi வலயங்களை கவரும் வகையில் அதி தொழிநுட்ப சக்திவாய்ந்த வைபை வசதிகளுக்கு மேலதிகமாக கையடக்க தொலைபேசிகளை சார்ஜ் செய்யும் வசதிகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கான வசதியையும் இந்த இயந்திரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.

Leave a comment