எதிர்காலத்தில் இந்நாட்டில் குடும்ப அரசியல் உருவாக மாட்டாது என உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
சபையொன்றில் உள்ளடங்கவேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளடங்கிய கட்டளைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரியவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இடம்பெறும் அனைத்து தேர்தல்களிலும் ஒரு குடும்பத்தில் ஒருவர் மாத்திரமே போட்டியிட முடியும் எனும் ஒழுக்கமுறையை இந்த நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு பழக்கப்படுத்தும் பாரிய பொறுப்பு தம்முன்னால் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
எந்த சவால்கள் வந்தாலும் அந்த பொறுப்பை நிறைவேற்றுவதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா இதன்போது மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.