தேசிய கணக்காய்வு சட்டமூலம் திரிபுபடுத்தப்பட்டு கள்ளர்களை தப்பிக்கும் வகையில் நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. மோசடியான கணக்காய்வு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. இந்த அரசாங்கத்தினால் ஊழலை தடுக்கவும் முடியாது, ஊழல் வாதிகளை தண்டிக்கவும் முடியாது எனவும் தெரிவித்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பு இன்று மாத்தறையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹன்துன்நெத்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.