சைட்டம் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய வழி

286 0

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரத்தை ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்கும் முகமாக, தொழில்முறைசார் தேசிய முன்னணி பொது ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளது.

இந்த ஆணைக்குழு, சைட்டம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அறிக்கையொன்றைத் தயாரிக்கும் வகையில், பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சேகரித்து நெறிப்படுத்தவுள்ளது.

பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையிலான இவ்வாணைக்குழுவில், கலாநிதி ஆனந்த ரணசிங்க, சட்டத்தரணி கனிஷ்க வித்தாரண, வைத்தியர் எஸ்.எம்.எஸ்.சமரக்கோன், பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க மற்றும் செயலாளர்க வைத்தியர் சாரதா கன்னங்கர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எதிர்வரும் பதினாறாம் திகதி முதல் சைட்டம் குறித்த மக்களின் கருத்துக்கள் இவ்வாணைக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment