அநுராதபுரம், விஹாரஹல்மில்ல குளம் பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் கணவனும் மனைவியும் என தெரியவந்துள்ளதுடன் உயிரிழந்த பெண்ணின் உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் முன்னாள் கணவனுடைய மகன் இன்று காலை வீட்டுக்கு வந்த போது சடலங்களை கண்டுள்ளதுடன் உயிரிழந்தவர்கள் 35 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.