தேசிய சுதந்திர முன்னணியின் அமைப்பாளர் துப்பாக்கியுடன் கைது

310 0

தேசிய சுதந்திர முன்னணியின் கல்கிஸ்ஸை தெலவல அமைப்பாளர் துப்பாக்கி மற்றும் ரவைகள் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமல் வீரவங்ச எம்.பி.யின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணிக்கும் கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அண்மைய செய்திகள் தெரிவித்திருந்தன.

விமல் வீரவங்சவின் கட்சி உறுப்பினர்கள் மாத்திரம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment