7500 கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் இருவர் கைது

290 0

சட்டவிரோதமாக கழிவுத்தேயிலை ஒருதொகையை டிப்பர் லொறியில் ஏற்றிச்சென்று கொண்டிருந்த இருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா தேயிலை தொழிற்சாலை பகுதியில் நேற்று இரவு மணியளவில் சட்டவிரோதமாக அகரப்பத்தனை பகுதியிலிருந்து ஒருதொகை கழிவுத்தேயிலையுடன் லொறியொன்று வருவதாகக் கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின் படி பொலிஸார் இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது சுமார் 7500 கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் டிப்பர் லொறி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன், மீட்கப்பட்ட லொறியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

Leave a comment