ஒருகொடவத்தை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தேயிலை விநியோகத்திற்காக பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தின் காரணமாக தொழிற்சாலை அருகிலிருந்த 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பிரதேசவாசிகள் மற்றும் கிரண்டபாஸ் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த சம்பவம் காரணமாக தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.