ரயில் சாரதிகள் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுள்ள போதும், ரயில் சேவைகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்தது.
அவர்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுப்பதற்காகவும், அதற்காக எட்டு பேர் கொண்ட குழுவொன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்ததாக ரயில்வே தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று மாலை போராட்டத்தை இடைநிறுத்துவதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்தது. எனினும், ரயில் சேவைகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை.
போராட்டத்தில் பங்கேற்றிருந்த பல பணியாளர்கள் இன்னும் சேவைக்கு திரும்பாமையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், இன்று மதியம் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது