இடைக்கால அறிக்கையை வாசிக்காது மக்களுக்கு பொய் சொல்கிறார்கள் – சுமந்திரன் குற்றச்சாட்டு!

371 0

தமிழ் புத்திஜீவிகள் என அழைக்கப்படுபவர்கள் எவருமே இடைக்கால அறிக்கையை வாசிக்காது கேட்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகம் ஒன்றின் இடைக்கால அறிக்கை தொடர்பான கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், இந்த இடைக்கால அறிக்கை பற்றிக் குறை கூறிக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் இந்த அறிக்கையை ஒருதரம் வாசித்துவிட்டு கேட்கும் கேள்விகள் அனைத்தும் புத்தி சாதுர்யமான கேள்விகளாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு உதாரணமாக சட்டம் ஒழுங்கு மாகாணங்களுக்கு பகிரப்படும் எனச் சொல்கிறார்கள். ஆனால் இந்த அறிக்கையில் அதைப்பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை என பல்கலைக்கழக அறிஞர்கள் தொடக்கம் பல சட்டத்தரணிகள் வரை பொதுவெளிகளில் குற்றம் சுமத்துகின்றனர்.

இடைக்கால அறிக்கையின் முதல் பந்தியிலேயே அதற்கான விடை குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆகவே இடைக்கால அறிக்கையினை வாசிக்காது கேள்வி கேட்பவர்களின் எண்ணிக்கையே அதிகம் எனவும் தெரிவித்த அவர் தமிழ் மக்கள் 50ஆம் ஆண்டு காலப்பகுதியில் சமஷ்டியைக் கோரிவிட்டு 70ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனிநாடு கோரியதால், சமஷ்டி என்றால் பிரிவினைவாதம் என சிங்கள மக்கள் நினைக்கிறார்கள். அதற்காகத் தான் ‘ஏகிய ராஜ்யம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டதெனவும், தமிழில் ஒருமித் நாடு எனவும் பயன்படுத்தப்பட்டதாகவும் ஆங்கிலத்தில் யுனின்ரறி என்ற சொல் பயன்படுத்தப்படாது ‘ஏகிய ராஜ்யம்’ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டதாகவும், இதனைப் பற்றி மக்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment