முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய உறுப்பினர் உட்பட 10 பேர் வெகு விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய மலைபகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இந்த உறுப்பினருக்கு எதிராக சொத்து தொடர்பில் பல விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த விசாரணைகள் தொடர்பில் இந்த உறுப்பினரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ள போதிலும், அவ்வளவு சொத்துக்கள் எவ்வாறு சாம்பாதித்தார் என்பதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்க தவறியுள்ளனர்.
ஏனைய உறுப்பினர்களில் மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மேலும் ஒரு உறுப்பினர், சப்ரகமுவ மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இரண்டு கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்கள் மற்றும் தென் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மேலும் இரண்டு உறுப்பிர்களே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நபர்கள் இடைக்கிடையே அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த 10 பேர் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினுள் சந்தேகங்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது