இலங்கை அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்கள் மூலம் இராணுவத்துக்கும் இராணுவத்துக்கும் இடையிலான உறவினை அதிகரிக்க முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்கொட் ஸ்விஃப்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளின் கடற்படையினரும் திருகோணமலையில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இவ்வாறான பயிற்சிகள் இரண்டு நாடுகளின் இராணுவத்துக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு, நம்பிக்கை என்பவற்றை கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.