காரைநகரில் பொலிஸாரின் அடாவடி முருகன் ஆலயம் அடியோடு இடித்தழிப்பு

322 0

Temple11காரைநகர் – ஆலடிவேல் முருகன் ஆலையத்தின் உரிமம் தொடர்பாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நம்பிக்கை சொத்து வழக்கு நிலுவையில் உள்ள இருக்கின்ற நிலையில் குறித்த ஆலையம் நேற்று முன்தினம் இரவோடு இரவாக பொலிஸார் முன்னிலையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதி கிராம மக்களின் 98 ஆண்டு பழமைவாய்ந்த பாரம்பரிய நம்பிக்கை ஆலயமாக இருந்த ஆலடிவேல் முருகன் ஆலையம் இடித்தழிக்கப்பட்ட செயற்பாடானது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடரப்hக மேலும் தெரியவருவது:-
காரைநகர் ஆலடிவேல் முருகன் ஆலையமானது அப்பகுதி கிராம மக்களின் நம்பிக்கை தெய்வமாக கடந்த 98 ஆண்டுகளும் இருந்த வந்துள்ளது. இதன்படி அப்பகுதி கிராம மக்களே இவ்வாலையத்தினை இதுவரை காலமும் கொண்டு நடாத்தி வந்திருந்தனர்.
இந்நிலையில் அண்மையில் வெளியில் இருந்து வெந்த நபர் ஒருவர் குறித்த ஆலயம் அமைந்துள்ள காணி தன்னுடைய உரித்துக் காணி என்று கூறி ஆவணம் ஒன்றினையும் காண்பித்து வருகின்றார். அத்துடன் அவ்வாலையத்தினை அங்கிருந்து அகற்றுமாறும் மக்களைவ ர்புறுத்தி வருகின்றார்.
இச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஆலயம் சார்பில் குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த முறைப்பாடு தொடர்பாக எந்த நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இவ்வாலயப் பிரச்சினை தொடர்பாக இதுவரை காலமும் ஆலயத்தினை பராமரித்து வந்தவர்கள் சார்பில் ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்றத்தில் நம்பிக்கை சொத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு எதிர்வரும் 10 ஆம் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆலயத்தினை உரிமை கோரும் நபர் அங்கிருந்த முருகனுடைய வேலை எடுத்துச் சென்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல் நேற்று முன்தினம் இரவு ஊர்காவற்றுறை பொலிஸாருடன் அங்கு வந்த குறித்த நபர் ஆலயத்தினையும் இடித் தரைமட்டமாக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
நீதிமன்றத்தில் இவ்வாலையம் தொடர்பான வழங்கு நிலுவையில் உள்ள நிலையில் அவர் பொலிஸாருடன் வந்து இவ்வாறான அடாவெடித்தனங்களில் ஈடுபட்டு வருகின்றார். இவ்வாறான அடாவெடியால் அப்பகு மக்கள் மத்தியில் அச்சமான உணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் நம்பிக்கை சொத்து வழக்கினை தாக்கல் செய்தவர்களும் இவருடைய அடாவெடியால் அச்சப்பட்டுள்ளனர் என்றும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.