உள்ளூராட்சி மன்றங்களினால் அறவிடப்படுகின்ற வரி, அனுமதிபத்திர கட்டணங்கள் மற்றும் வேறு கட்டணங்கள் தொடர்பில் முறையான செயன்முறை ஒன்று கடைப்பிடிக்கப்படாமையினால் பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அதனடிப்படையில், உள்ளூராட்சி மன்றங்களினால் அறவிடப்படுகின்ற பல்வேறு வரி மற்றும் கட்டணங்கள் தொடர்பில் தேசிய மட்டத்திலான சாராம்சம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்பொருட்டு, தமது அமைச்சின் செயலாளரின் தலைமையிலான குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசல் முஸ்தபா முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட சில யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விசல் பொலன்னறுவை உப நகர நீர் வழங்கல் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு அவசியமான இயந்திரங்கள் மற்றும் மின்னியல் உபகரணங்கள் என்பவற்றை வழங்குதல், ஸ்தாபித்தல், பரிசீலித்தல் மற்றும் செயற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 154 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/S K P Projects Intenational (Pvt.) Ltd. நிறுவனத்துக்கு வழங்கல்.
பொலன்னறுவை கிழக்கு நகர நீர் வழங்கல் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 354 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s China Harbour Engineering Company Ltd. நிறுவனத்துக்கு வழங்கல் உள்ளிட்ட தீர்மானங்கள் அவரின் முன்வைக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.