வாழைச்சேனையில் கரையோர காவற் படையினரால் பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட பலிச்சுறா மீன் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடல்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரூக்சான் குரூஸ் தெரிவித்தார்.
கரைக்கு திரும்பிய படகு ஒன்றில் இருந்த 160 கிலோ கிராமிற்கு மேல் நிறையுடைய புலிச்சுறா மீன் ஒன்று புதன்கிழமை கைப்பற்றப்படுள்ளதுடன், இவ்வகை மீன் இனம் தடைசெய்யப்பட்ட மீன் என்பது குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என குறித்த படகில் உள்ள மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
வாழைச்சேனை மீன்பிடி துறைமுக பகுதியில் வைத்து இப் புலிச்சுறாவினை கைப்பற்றிய கரையோர காவற்படையினர் அதற்கான மேலதிக நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த மீன் இனம் கடல்வாழ் பேரினத்தில் எஞ்சியிருக்க கூடிய ஒரே சுறா இனம் என்பதுடன், இதனை கடல்புலி என்றும், இதன் உடலில் காணப்படும் ஆழ்ந்த கோடுகள் புலியின் தோலினைப் போல ஒத்திருப்பதால் புலிச்சுறா என்றும் அழைப்பதாக தெரிய வருகின்றது.