மதுவரி கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை

246 0

செயற்கை கள் உட்பட ஏனைய சட்டவிரோத கள் உற்பத்திகளைத் தடுப்பதற்காக மதுவரி கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்நாட்டுக்குள் உற்பத்தியை நிர்ணயம்செய்யும்நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் இணைப்பேச்சாளரும் காணி அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற, அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கித்துல் கள் தவிர்ந்த ஏனைய கள் வகைகளை இறக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து கள் இறக்குவதற்குவதற்காக அனுமதிப்பத்திரத்தைப் பெறவேண்டும் என விதப்புரைகளை உட்படுத்தி மதுவரி கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள மதுவரி (திருத்தங்கள்) சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சர் கயந்த மேலும் தெரிவித்தார்

Leave a comment