2018ம் ஆண்டு நடைபெறவுள்ள போட்டிகளுக்காக பிரித்தானிய மகாராணியினால் விடுத்த செய்தியை தாங்கிய அஞ்சல் ஓட்ட கோல் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
1930ம் ஆண்டு தொடக்கம் அனுசரிக்கப்படும் பாரம்பரியத்திற்கு அமைய இக் கோல் பொதுநலவாய அங்கத்துவ நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கமாகும்.
குறித்த கோலைக் கொண்டுவரும் அதிகாரிகள் இன்று பிற்பகல் 4 மணி அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததன் பின் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழு அவ் அஞ்சலோட்ட கோலை வாகன ஊர்தியில் கொழும்புக்கு கொண்டுவந்து ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளனர்.
வெள்ளிக்கிழமை விசேட புகையிரதம் மூலம் காலிக்கு எடுத்துச் செல்லப்படும் இவ்வஞ்சலோட்டக்கோல் நாளை மறுதினம் சனிக்கிழமை கொழும்பு ரோயல் கல்லூரியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என தேசிய ஒலிம்பிக் சபை தெரிவித்துள்ளது.
2018ம் ஆண்டுக்கான பொதுநலவாய போட்டிகள் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.