தீபாவளி முற்பணமாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்குக!

274 0

தீபாவளி முற்பணமாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறை, 10 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்குமாறு, முதலாளிமார் சம்மேளனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இந்த விவகாரம் தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான முத்து சிவலிங்கம், அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவோடும் இன்னும் இதர செலவுகளை கருத்தில் கொண்டு, இம்முறை தீபாவளி பண்டிகை முற்பணத்தை 10,000 ரூபாயாக அதிகரித்து, உடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்”

“பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் தமது விசேட தினங்களை கொண்டாடுவதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றார்கள். வருடத்தில் ஒருமுறை வரும் இப்பெருநாளை கொண்டாடுவதற்கு, பணவசதிகள் இல்லாது பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வேளையில், வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், கடந்த வருடங்களில் வழங்கப்பட்ட முற்பணம், போதாது. எனவே, இந்த விடயத்தில், தோட்டக் கம்பனிகள் உரிய கவனத்தை செலுத்தி, 10 ஆயிரம் ரூபாயை முற்பணமாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

Leave a comment