தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வவுனியாவில் புதிய அமைப்பு

443 0

அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஜனநாயக ரீதியாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், அழுத்தம் கொடுக்கும் வகையிலும் புதிய அமைப்பு ஒன்று உதயமாகியுள்ளது.

வவுனியா இந்திரன் விருந்தினர் விடுதியில் நேற்று மாலை நடைபெற்ற பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடலின் போதே குறித்த அமைப்பு உதயமாகியுள்ளது.

வவுனியா வெகுஜன போராட்ட ஒருக்கமைப்புக் குழு என்னும் பெயரில் இவ் அமைப்பு உதயமரியுள்ளதுடன், தற்போது 17 பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அதில் அங்கத்துவம் பெற்றுள்ளனர். மேலும் பல அமைப்புக்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்பின் ஏற்பாட்டிலேயே கடந்த திங்கட்கிழமை வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தொடர் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கும் வகையிலே அப் பொது அமைப்புக்கள் இணைந்து புதிய அமைப்பினை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment