வித்தியாவின் தாயை அச்சுறுத்தியவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

332 0

kayts-10வித்தியாவின் தாயாரை அச்சறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள வித்தியா கொலை குற்றவாளியின் தாயாரை தொடர்ந்து எதிர்வரும் 29 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்தவழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் மேற்படி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வித்தியா கொலை வழக்கு விசாரணைகளை பார்வையிடுவதற்கு வந்த வித்தியாவின் தாயார் கொலை சந்தேக நபர்களான சுவிஸ்குமார், உசாந்தன் ஆகியோரின் தாயார் இணைந்து அச்சுறுத்தியிருந்தனர்.
இது தொடர்பாக சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீதிமன்றத்தின் கவனத்திற்க கொண்டு சென்றதன் பின்னர் அது தொடர்பா ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதன்படி சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியிருந்தனர். நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்.